NEET

         NEET தொடர்பான கேள்விகளுக்கு யாரை குறை சொல்லுவது என்பது தெரியவில்லை தெரிவிக்க வேண்டிய இடத்தில என் மக்களும் இல்லை. இனி வரும் காலங்களில் எம்முடைய அடுத்த தலைமுறையினர் முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் பட்சத்தில் அவன்மருத்துவர் ஆவது என்பது நடக்காமலே போனாலும் ஆச்சர்ய படுவதற்கு ஏதும் இல்லை.

                மத்திய அரசே  இங்கு சிஸ்டம் குறைபாட்டுடன்  உள்ளதுஅதை திருத்தாமல் உங்களது கல்வி கொள்கைகளை இங்கே நடைமுறை படுத்த இயலாது. முதலாவது இந்தியா முழுவதுமே ஒரே  பாடத்திட்டம் நடை முறைப்படுத்த வேண்டும். 
                 
                  அந்த திட்டமானது கடைக்கோடி மனிதரையும் சென்றடைய  வேண்டும். அப்பொழுதுதான் எந்த ஒரு திட்டதையும் நடை முறை படுத்த இயலும். CBSEஇல் படிப்பவரும் STATE BOARDஇல் படிப்பவர்களும் ஒன்றாக முடியாது.

                   இந்த நிலையில் நீதி மன்றத்தையும் குறைகூறிதான்  ஆகவேண்டும். திட்டத்தை நடைமுறை படுத்துவதில் இவ்வளவு கண்டிப்புடன் இருந்த நீதி மன்றம்  அதை நடைமுறை படுத்துவதில் இவ்வளவு சுணக்கம் காட்டியது ஏன் ? 

                   ஒரு சட்டத்தை நடைமுறை படுத்துவதில் இவ்வளவு தெளிவாக இருந்த நீதி மன்றம் அதை நடைமுறை படுத்துவதில் பூஜியம் ஆகிவிட்டது. மாநில அரசு  நீதி மன்றம் கொடுத்த அவகாசத்தை சரியாக பயன்படுத்தி உள்ளதா என்பதை பார்த்திருக்க வேண்டும்.

                     அடுத்து மாநில அரசு மத்திய அரசும் நீதி மன்றமும் கொடுத்த விலக்கை சரியாக பயன் படுத்த தவறி விட்டது. இவர்களுக்கு ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே நேரம் போதாமல் போனதோ என்னவோ NEETஇன் செயல் முறையை நடைமுறை படுத்த முடியாமல் போய் விட்டது நீதி மன்றம் கொடுத்த அவகாசத்திற்குள் NEETயை ஒரு subject ஆக நடைமுறை படுத்தி இருக்க வேண்டும்.

                       நீதி மன்றமோ.... மத்திய அரசோ.... மாநில அரசோ.... NEET காண தெளிவான நடை முறையை பயன்படுத்துங்கள் எங்கள் மாணவர்களின் கனவுகளை வெறும் கனவுகளாகவே ஆக்கி விடாதீர்கள்.

      கண்ணீருடன் முதல் தலைமுறை பட்டதாரியாக ஆசை பட்ட இந்திய பிரஜை ...............

Comments

Popular posts from this blog

The sword